Balgates’s Weblog

I’m Wat I’m!!!

‘தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்’ – புதிய கட்சி

தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து கொடியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள், கோவையைச் சேர்ந்த சில ரஜினி ரசிகர்கள்.

தமிழகம் முழுவதிலும் உள்ள ரஜினியின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்று கோரிக்கை விடுத்தும் போஸ்டர்கள் ஒட்டியும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, குசேலன் தோல்விக்குப் பிறகு பலரும் ரஜினியின் செல்வாக்கு சரிந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்த் தருணத்தில் தங்கள் தலைவர் அரசியலுக்கு வந்து தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆனால் ரஜினியோ இந்த நிமிடம் வரை தனது முடிவு குறித்து தெரிவிக்கவில்லை.

membership_forum by you.

சிவப்பு, வெள்ளை, கறுப்பு என 3 நிறங்களைக் கொண்டுள்ள கொடியில் நடுவில் நீல நிறத்தில் நட்சத்திரம் அதன் நடுவே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் உருவம் பொரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரமே சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் என்ற பெயரையொட்டி, ரஜினி ராஜ்ஜியம் என்ற பெயரில் ரஜினி ரசிகர்கள் கோவை முழுவதும் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

கோவா ஷூட்டிங் முடிந்ததும் தனது ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினி இந்த விஷயத்தில் தனது முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ரபோடும், தமிழகம் முழுக்க இன்னும் பரபரப்பான அரசியல் போஸ்டர்களை அடித்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

October 11, 2008 Posted by | Cinema, General, Politics | , , , , , , , , , , | Leave a comment